மிக பெரிய மொபைல் நிறுவனமான சாம்சங் இந்திய சந்தையில் தனக்கென ஒரு பெயர் பெற்று உள்ளது.மேலும் இந்த நிறுவனத்தின் போன்கள் அனைத்து விதமான பட்ஜெட் உடன் ஒத்து போவதால் மக்களால் அதிகம் விரும்ப படுகிறது.
இந்நிலையில் இந்த நிறுவனம் தனது அடுத்த மாடல் ஆன சாம்சங் கேலக்சி எம்51 ஐ வெளியிட இருந்தது.இதற்கு முன்னர் இந்த மாடெல் ஜூலை யில் வெளி ஆகும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் இந்தியாவில் இந்த போன் செப்டம்பரில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இது “மேக் இன் இந்தியா திட்டம்”மூலம் உருவாக்க பட்ட ஒரு மாடெல் ஆகும்.
சிறப்பு அம்சங்கள்:
1.சாம்சங் போன்கள் எப்போதும் தங்கள் கேமரா விற்கு குறை வைப்பது இல்லை அதே போல் தற்போது வந்துள்ள இந்த மாடலிலும் 64மெகா பிக்சல் மற்றும் 12 மெகா பிக்சல் உடனும் பின்புற கேமரா வருகிறது. முன் பக்க கேமரா பற்றி சரியாக தெறிய வில்லை.
2.இதன் ப்ராசெசர் ஸ்னாப்டிராகன் 730 ஆக இருக்கும் என தெரிகிறது
3.இதன் டிஸ்பிலே அளவு 6.67 இன்ச் ஆகும்.
4.பேட்டரி அளவு 7000 mah ஆகும்
5.6 மற்றும் 8 ஜிபி என இரு வகை ரேம் உடன் வருகிறது.
6.மேலும் 25w பாஸ்ட் சார்ஜிங் வேகம் இதில் கிடைக்கிறது.
7.இதன் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 ஆகும்.இது தான் தற்போதைய லேட்டஸ்ட் வெர்சன் ஆகும்.